மனநலம் குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாரம் - அக்டோபர் 05 முதல் 10 வரை
October 8 , 2021 1380 days 439 0
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகமானது “மனநலம் குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாரத்தினை” அனுசரிக்கின்றது.
இது 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 05 அன்று தொடங்கி அக்டோபர் 10 அன்று நிறைவடைகிறது.
அக்டோபர் 10 ஆம் தேதியானது உலக மனநல தினமாக குறிப்பிடப்படுகிறது.
மனநலக் குறைபாட்டுடன் தொடர்புடைய களங்கங்களை உடைப்பதில் மக்களின் பங்களிப்பினை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு இந்தியாவில் “மனநலம் குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாரம்” அனுசரிக்கப்படுகிறது.