மனிதனின் தலைமுடியை ஏற்றுமதி செய்வதற்குக் கட்டுப்பாடுகள் விதிப்பு
January 30 , 2022 1431 days 585 0
இந்திய அரசானது மனிதனின் தலைமுடியை ஏற்றுமதி செய்வதற்குக் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
இந்தியாவிலிருந்து பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக வேண்டி இந்தத் தடையானது விதிக்கப் பட்டுள்ளது.
தற்போது இந்தியாவிற்கு வெளியே ஏற்றுமதி நிறுவனங்கள் மனிதனின் முடியினை ஏற்றுமதி செய்வதற்கு, வெளிநாட்டு வர்த்தகப் பொது இயக்குநகரத்திடமிருந்து ஒரு அனுமதி (அ) உரிமத்தினைப் பெற்றிருக்க வேண்டும்.