மனிதன் மற்றும் யானை இனங்கள் இடையிலான சூழலியல் சார்ந்த மோதல்
January 25 , 2023 1023 days 515 0
ஒடிசா அரசானது, யானைகளைப் பாதுகாப்பதற்காகவும், மனிதன் மற்றும் யானை இனங்கள் இடையிலான சூழலியல் சார்ந்த மோதலைத் தணிப்பதற்காகவும் ஒரு விரிவான செயல் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி அம்மாநிலமானது நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
மூன்று யானைகள் காப்பகங்களைக் கொண்டிருக்கும் மண்டலம் I - என்பது 'யானை பாதுகாப்பு மண்டலமாக' விளங்கும்.
மண்டலம் II ஆனது, வாழ்விடத்தின் தரம் மற்றும் வாழ்தகவுத் திறனை அதிகரிக்கச் செய்வதற்காகவும், நீண்டகால உத்திகள் மூலம் மோதலைக் குறைப்பதற்காகவும் ஒரு சகவாழ்வு மண்டலமாக பேணி காக்கப்படும்.
மண்டலம் III ஆனது, குறுகிய கால உத்திகள் மூலம் மோதலைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் வகையில் ஒரு மோதல் தணிப்பு மண்டலமாக இருக்கும்.
மண்டலம் IV என்பது யானைகள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியாக இருக்கும்.
இந்த மண்டலத்தில் சுற்றித் திரியும் யானைகள் பிடிக்கப்பட்டு, அவை எங்கிருந்து வந்தன என்று அடையாளம் காணப்பட்டு அவை அந்த இடங்களுக்கு உடனடியாக இட மாற்றம் செய்யப் படும்.
கடந்த ஒன்பது ஆண்டுகளில், ஒடிசாவில் 700 யானைகள் உயிரிழந்துள்ள நிலையில், மனிதன் மற்றும் யானை ஆகியவற்றுக்கு இடையிலான சூழலியல் சார்ந்த மோதலால் ஏற்பட்ட மனித உயிரிழப்பு 860 என்ற எண்ணிக்கையினை எட்டியுள்ளது.