மனிதர்களில் நிபா நோய்க்கு எதிரான முதல் தடுப்பூசி பரிசோதனை
January 19 , 2024 661 days 518 0
ஐக்கியப் பேரரசின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆனது, கொடிய நிபா வைரஸ் பாதிப்பிற்கு எதிரான முதல் மனிதப் பயன்பாட்டுத் தடுப்பூசி சோதனைகளை தொடங்கி யுள்ளது.
ChAdOx1 NipahB தடுப்பூசியின் சோதனைகள், 18 முதல் 55 வயதுக்குட்பட்ட 51 நபர்களின் மீது மேற்கொள்ளப்பட்டது.
ஒரு பேரழிவுகரமான நோயான நிபா வைரஸ் சுமார் 75% பாதிப்புகளில் பெரும் உயிர் பலியினை ஏற்படுத்தக் கூடியது.
சிங்கப்பூர், மலேசியா, வங்காளதேசம் மற்றும் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இந்த நோய்ப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நிபா வைரஸ் பழ வெளவால்களால் பரவுகிறது என்பதோடு மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட விலங்குகளுடனான தொடர்பு (பன்றிகள் போன்றவை) அல்லது மனிதர்களுக்கு இடையிலான தொடர்பு மூலமும் பரவுகிறது.
நிபா வைரஸ் முதன்முதலில் 1998 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது.