மனிதர்கள் சுமந்து செல்லக்கூடிய பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை
January 16 , 2022 1281 days 464 0
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது மனிதர்கள் சுமந்து செல்லக் கூடிய பீரங்கி எதிர்ப்பு வகை ஏவுகணையை (MPATGM - Man-Portable Anti-Tank Guided Missile) வெற்றிகரமாக சோதனை செய்தது.
MPATGM ஆனது தெலுங்கானாவின் பானூரில் உள்ள பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படும்..
MPATGM என்பது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பீரங்கி எதிர்ப்பு வகையிலான, குறைந்த எடை கொண்ட மற்றும் இயக்கிய பின் தன்னைத் தானே இலக்கை நோக்கி செல்லும் வகையில் இயக்கிக் கொள்ளும் ஒரு ஏவுகணையாகும்.
இது மூன்றாம் தலைமுறை பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணையாகும்.
இது நாக் பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணையிலிருந்துப் பெறப்பட்டது.
ஒருங்கிணைந்த வழி காட்டப்பட்ட ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு தளங்களில் இருந்து இதை ஏவ முடியும்.