மனிதர்கள் சுமந்து செல்லக்கூடிய பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை (MPATGM)
September 17 , 2018 2596 days 885 0
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மனிதர்களால் சுமந்து செல்லக்கூடிய பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையானது மகாராஷ்டிராவின் அஹமத் நகர் வரம்பிலிருந்து இரண்டாவது முறையாக வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
MPATGM (Man Portable Anti-Tank Guided Missile) ஆனது DRDO ஆல் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மூன்றாம் தலைமுறை பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையாகும் (anti-tank guided missile - ATGM).
இது ஏவிய பின் தொலைந்து போகும் வகையில் செயல்படும் திறனுடையது மற்றும் இது இந்திய இராணுவத்தில் தற்போது சேவையில் உள்ள கீழ்க்காண்பவற்றிற்கு மாற்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரான்சில் உருவான இரண்டாம் தலைமுறை பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையான ‘மிலன்’ மற்றும்
ரஷ்யாவின், மித தானியங்கி கம்பி வழி இயங்கு இணைப்பால் வழிநடத்தப்படும் ஏவுகணை ‘கொங்கூர்’.
தற்போது இந்திய இராணுவமானது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மூன்றாம் தலைமுறை பீரங்கி எதிர்ப்பு (ATGM) ஏவுகணையான “நாக்” ஐ தனது படையில் கொண்டுள்ளது. ஆனால் இது இராணுவத்தின் முக்கிய தேவையான எளிதில் தூக்கிச் செல்லக்கூடியதாக இல்லை.