இது ஐக்கிய நாடுகள் வளர்ச்சி அறிக்கையினால் வெளியிடப்பட்டுள்ளது.
இது “2009 ஆம் ஆண்டு மனித வளர்ச்சி அறிக்கை மற்றும் இலக்கு நோக்கிச் செல்ல வேண்டிய தூரம்” எனப்படும் அறிக்கையின் மீதான ஒரு ஆய்வாகும்.
இது இடப்பெயர்வின் உண்மைத் தன்மை என்பதையும் அது எவ்வாறு தற்பொழுது மனித வளர்ச்சியுடன் தொடர்பு கொள்கின்றது என்பதையும் உள்ளடக்கியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் மனித இடப்பெயர்வு இயக்கமானது அதிக அளவிற்கு அதிகரித்துள்ளது.
இந்த அதிகரிப்பானது வெனிசுலா, வடக்கு நைஜீரியா, மியான்மர் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் நிலவும் சூழ்நிலைகள் மற்றும் இதர காரணங்களால் உந்தப் பட்ட மனித இயக்கத்தால் நிகழ்த்தப் பட்டுள்ளது.