மனித உடல் மீதான உலகின் முதல் முப்பரிமாண வண்ண X - கதிர்வீச்சு
July 14 , 2018 2659 days 905 0
நியூசிலாந்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள் உலகின் முதல் முப்பரிமாண X-கதிர் வீச்சினை மனித உடல் மீது செயல்படுத்தியுள்ளனர். இது மருத்துவத்துறையில் நோய்க் கண்டறிதலை மேம்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.
இந்த புதிய சாதனம் பாரம்பரிய கருப்பு மற்றும் வெள்ளை X-கதிர் வீச்சினை அடிப்படையாகக் கொண்டது.
ஆனால் இது மெடிப்பிக்ஸ் என்று அழைக்கப்படும் அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய அமைப்பினால் (European Organisation for Nuclear Research) உருவாக்கப்பட்ட துகள்களை கண்காணிக்கும் (particles detecting) தொழில் நுட்பத்தினைக் கொண்டுள்ளது.
மெடிப்பிக்ஸ் (medipix) அதன் திரை திறந்திருக்கும் போது பிக்சல்களுடன் மோதும் தனிப்பட்ட துணை – அணுத் துகள்களை கண்டறியும் மற்றும் எண்ணும் புகைப்படக் கருவி போல் செயலாற்றும்.
இது பெரும் ஒப்புப் படித்திறன் மற்றும் உயர் பிரிதிறன் கொண்ட புகைப்படங்களுக்கு இசைகிறது.
இந்த தொழில்நுட்பமானது நியூசிலாந்தின் MARS உயிரியப் புகைப்பட நிறுவனத்தினால் வணிக ரீதியாக்கப்பட்டது.