TNPSC Thervupettagam

மனித உரிமைகளுக்கான உலகளாவிய கூட்டணி

June 16 , 2026 13 hrs 0 min 29 0
  • 2028 ஆம் ஆண்டில் மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தின் (UDHR) 80-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகம் (OHCHR) ஆனது 'மனித உரிமைகளுக்கான உலகளாவிய கூட்டணி'யை (GAHR) ஒரு நீண்டகால முன்னெடுப்பாகத் தொடங்கியுள்ளது.
  • மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம் (UDHR) என்பது 1948 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஐக்கிய நாடுகளின் பிரகடனம் ஆகும், இது அனைத்து மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை வரையறுக்கிறது.
  • முடிவெடுப்பதில் மனித உரிமைகளை மையப்படுத்துவதையும், பொறுப்புள்ள அரசாங்கங்கள், அனைவரையும் உள்ளடக்கிய சமூகங்கள் மற்றும் நியாயமான பொருளாதாரங்களை மேம்படுத்துவதையும் இக்கூட்டணி நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • நோக்கம் சார்ந்த, அனைவரையும் உள்ளடக்கிய, செயல் சார்ந்த, சுற்றுச்சூழல் கட்டமைப்பு மற்றும் மாற்றுச் சிந்தனை அணுகுமுறைகள் ஆகியன இதன் முக்கியக் கொள்கைகளாகும்.
  • இந்த முன்னெடுப்பானது கற்பனை செய்தல் (சிறந்த எதிர்காலத்தை உருவகப் படுத்துதல்), உரையாடல் (உள்ளடக்கிய விவாதங்களை ஊக்குவித்தல்) மற்றும் செயல்படுதல் (வாக்குறுதிகளைச் செயலாக மாற்றுதல்) ஆகிய மூன்று கொள்கைகளால் வழிநடத்தப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்