அனைத்து மக்களும் சுதந்திரமாகவும், சமமாகவும், கண்ணியத்திற்கும் நீதிக்கும் தகுதியானவர்கள் என்பதை அனைவருக்கும் நினைவூட்டுவதே இந்த நாளின் நோக்கம் ஆகும்.
ஐக்கிய நாடுகள் சபையால் மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம் (UDHR) 1948 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டதை இந்த நாள் குறிக்கிறது.
1950 ஆம் ஆண்டில், ஐ.நா. சபையானது இந்த நாளைக் கொண்டாடவும் மனித உரிமைகள் கல்வியை ஊக்குவிக்கவும் வேண்டி அனைத்து நாடுகளுக்கும் முறையாக அழைப்பு விடுத்தது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Our Everyday Essentials" என்பதாகும்.
UDHR என்பது உலகில் மிகவும் மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்களில் ஒன்றாகும் என்பதோடு மேலும் இது பல தேசிய சட்டங்கள் மற்றும் உரிமைகள் இயக்கங்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது.