TNPSC Thervupettagam

மனித உரிமைகள் பாதுகாப்பு (திருத்த) மசோதா 2019

August 2 , 2019 2112 days 4789 0
  • மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1993 ஐ திருத்தும் மனித உரிமைகள் பாதுகாப்பு (திருத்த) மசோதா 2019 ஆனது நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்டது.
  • 1993 ஆம் ஆண்டுச் சட்டத்தின்படி, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (National Human Rights Commission - NHRC) தலைவராக நியமிக்கப்படுபவர் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருக்க வேண்டும்.
  • ஆனால் தற்பொழுது இந்தியாவின் தலைமை நீதிபதியோ அல்லது ஏதேனும் உச்ச நீதிமன்ற நீதிபதியோ  இந்த ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்படலாம்.
  • இது போலவே, மாநில மனித உரிமைகள் ஆணையமானது ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அல்லாமல் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்பட எந்தவொரு உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையிலும் செயல்படலாம்.
  • முந்தைய சட்டமானது மனித உரிமைகள் குறித்த அறிவைக் கொண்ட 2 நபர்களை NHRCன் உறுப்பினர்களாக நியமிக்க வழிவகை செய்கின்றது.
  • ஆனால் திருத்தப்பட்ட மசோதாவானது மூன்று நபர்களை உறுப்பினர்களாக நியமிக்கவும், அவர்களில் குறைந்தபட்சம் ஒரு நபராவது பெண்ணாக இருக்கவும் வழிவகை செய்கின்றது.
  • இந்தத் திருத்தமானது உறுப்பினர்களின் பதவிக் காலம் 3 ஆண்டுகள் அல்லது உறுப்பினர்கள்  70 வயதைப் பூர்த்தி செய்யும் வரை, இவற்றில் எது முதலில் வருகிறதோ அவற்றின் அடிப்படையில் உறுப்பினர்களின் பதவிக் காலத்தை குறைத்துள்ளது. இதற்கு முன்பு உறுப்பினர்களின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாகும்.
  • மேலும் இந்தத் திருத்தம் NHRC மற்றும் SHRC-ன் உறுப்பினர்களை 5 ஆண்டு காலத்திற்கு மீண்டும் உறுப்பினர்களாக நியமிக்க அனுமதிக்கின்றது. இவ்வகையில் இந்தத் திருத்தமானது “மறு நியமனத்திற்கான5 ஆண்டு காலக் கட்டுப்பாட்டை நீக்கியுள்ளது.
  • 1993 ஆம் ஆண்டின் சட்டமானது NHRCன் பொதுச் செயலாளர் மற்றும் SHRC-ன் செயலாளர் என்ற பதவிகளை உருவாக்க வழிவகை செய்துள்ளது. இவர்கள் NHRC மற்றம் SHRCன் தலைவர்களினால் அவர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை செயல்படுத்துவர்.
  • இந்தத் திருத்தத்திற்குப் பின்பு, NHRC மற்றும் SHRCன் (State Human Rights Commission) தலைவர்களின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு பொதுச் செயலாளர்கள் நீதி சார்ந்த பணிகளைத் தவிர, அனைத்து நிர்வாக மற்றும் நிதி சார்ந்த (நீதி சாராத) ணிகளை மேற்கொள்ர்.
  • தற்போதைய மனித உரிமைகள் ஆணையம் பிற்படுத்தப்பட்ட  வகுப்பினர்களுக்கான தேசிய ஆணையத்தின் தலைவர், குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான தலைமை ஆணையர் ஆகியோர் இதன் உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டும்.
  • இந்த மசோதாவானது ஒன்றியப் பிரதேசங்களினால் மேற்கொள்ளப்படும் மனித உரிமை ஆணையத்தின் பணிகளை தேவைப்பட்டால் மத்திய அரசு அப்பணிகளை SHRC மேற்கொள்ள வழிவகை செய்கின்றது. புது தில்லியைப் பொறுத்தவரை மனித உரிமைகள் தொடர்பான பணிகளை தேசிய மனித உரிமைகள் ஆணையமே கவனிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்