மனித-மிருக மோதல் இறப்புகள் மாநில பேரிடராக அறிவிப்பு
October 24 , 2018 2485 days 852 0
மனித மிருக மோதலினால் ஏற்படும் இறப்புகளை மாநில பேரிடராக அறிவித்த முதல் மாநிலமாக உத்திரப் பிரதேசம் ஆகியுள்ளது.
சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் நிவாரணத்தை உறுதி செய்வதற்காக இதுபோன்ற விபத்துக்களை மாநில பேரிடர் நிவாரண நிதியத்தின் வரம்புக்குள் அம்மாநிலம் கொண்டு வந்துள்ளது.
ஒரு நபர் விலங்குகளால் தாக்கப்பட்டு இறக்கும்போது இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் வழங்கப்படும்.