ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்ட அமைப்பானது சமீபத்தில், மனித மேம்பாட்டுக் குறியீட்டினை வெளியிட்டது.
முதன்முறையாக, உலக மனித மேம்பாட்டுக் குறியீடு (HDI) ஆனது தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக வீழ்ச்சியடைந்துள்ளது.
நிலையான மேம்பாட்டிற்கான 2030 ஆம் ஆண்டுச் செயல்பாட்டு நிரல் மற்றும் பாரீஸ் உடன்படிக்கையை ஏற்றுக் கொண்ட பிறகான போக்கில் உலகை மீண்டும் இது கொண்டு சென்றது.
2020 அல்லது 2021 ஆம் ஆண்டில் சுமார் 90 சதவீத நாடுகள் தங்கள் மனித மேம்பாட்டுக் குறியீட்டின் மதிப்பில் சரிவு பதிவாகியுள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
2021 ஆம் ஆண்டு மனித மேம்பாட்டுக் குறியீட்டில் சுவிட்சர்லாந்து, நார்வே மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் முதலிடத்தில் உள்ளன.
2021-2022 ஆம் ஆண்டில் 191 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இந்தியா 132வது இடத்தில் உள்ளது.
கடந்த ஆண்டு இந்தியா 131வது இடத்தில் இருந்தது.
இந்தியாவின் சமீபத்திய மனித மேம்பாட்டுக் குறியீட்டு மதிப்பானது (0.633) 2020 ஆம் ஆண்டு அறிக்கையின் 0.645 என்ற மதிப்பை விடக் குறைவாக, இந்திய நாட்டினை நடுத்தர மனித வளர்ச்சிப் பிரிவில் வைத்துள்ளது.
இது உலகச் சராசரியான 0.732 என்ற மதிப்பை விடக் குறைவாகும்.
1990 ஆம் ஆண்டில், பாகிஸ்தானியப் பொருளாதார நிபுணர் மஹ்பூப்-உல்-ஹக் மனித மேம்பாட்டுக் குறியீட்டை (HDI) உருவாக்கினார்.
இது மனித மேம்பாட்டின் மூன்று அடிப்படைப் பரிமாணங்களில் சராசரிச் சாதனைகளை அளவிடுகிறது.
நீளமான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை
கல்விக்கான அணுகல் மற்றும்
முறையான வாழ்க்கைத் தரம்.
இது பின்வரும் நான்கு குறிகாட்டிகளைப் பயன்படுத்திக் கணக்கிடப்படுகிறது
பிறப்பு நிலையில் எதிர்பார்க்கப்பட்ட ஆயுட்காலம்
சராசரி பள்ளிக்கல்வி ஆண்டுகள்
எதிர்பார்க்கப்படும் பள்ளிக் கல்வி ஆண்டுகள், மற்றும்