2025 ஆம் ஆண்டிற்கான மனித மேம்பாட்டு அறிக்கை “A Matter of Choice: People and Possibilities in the Age of AI” என்று தலைப்பிடப் பட்டது.
2023 ஆம் ஆண்டு ஐநா மேம்பாடுத் திட்ட அமைப்பின் மனித மேம்பாட்டுக் குறியீட்டில் மதிப்பிடப்பட்ட 193 நாடுகளில் இந்தியா 130வது இடத்தைப் பிடித்தது.
இது முந்தைய ஆண்டில் இருந்த 133வது இடத்திலிருந்து 3 இடங்கள் முன்னேறியதைக் குறிக்கிறது.
0.685 என்ற HDI மதிப்புடன், இந்தியா "நடுத்தர மனித மேம்பாட்டுப் பிரிவில்" உள்ளது.
2022 ஆம் ஆண்டில் சுமார் 71.7 ஆண்டுகளாக இருந்த இந்தியாவின் பிறப்பின் போது எதிர்பார்க்கப் படும் ஆயுட்காலமானது, 2023 ஆம் ஆண்டில் 72 ஆண்டுகளாக உயர்ந்து, தரவரிசையில் முன்னேற்றத்திற்குப் பங்காற்றிய மற்ற காரணிகளுள் ஒன்றாகும்.
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் பள்ளிக் கல்வி ஆண்டுகள் சுமார் 13 ஆக மாறாமல் அப்படியே உள்ளன.
முந்தைய ஆண்டில் 6.6 ஆக இருந்த சராசரி பள்ளிக் கல்வி ஆண்டுகள் ஆனது 2023 ஆம் ஆண்டில் 6.9 ஆக சற்று உயர்ந்தது.
தனி நபர் மொத்தத் தேசிய வருமானம் ஆனது, 2022 ஆம் ஆண்டில் சுமார் 8475 டாலராக இருந்தது.
பாலினச் சமத்துவமின்மையைக் குறைப்பதில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது என்பதுடன், பாலினச் சமத்துவமின்மைக் குறியீட்டில் (GII) மதிப்பிடப்பட்ட மொத்தம் 193 நாடுகளுள் 102வது இடத்தைப் பிடித்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட 166 நாடுகளில் இந்தியாவானது 108வது இடத்தைப் பிடித்தது.
சமத்துவமின்மையானது இந்தியாவின் HDI மதிப்பினை 30.7 சதவீதம் குறைப்பதால், இது பிராந்தியத்தில் மிக உயர்ந்த இழப்புகளில் ஒன்றாகும்.
'நடுத்தர மனித மேம்பாட்டுப்' பிரிவில் இந்தியாவுடன் இணைந்து வங்காளதேசம் 130வது இடத்திலும், நேபாளம் 145வது இடத்திலும், பூடான் 125வது இடத்திலும் உள்ளன.
பாகிஸ்தானின் HDI மதிப்பெண்கள் ஆனது 164 என்ற மதிப்பிலிருந்து 168 ஆகவும், ஆப்கானிஸ்தான் ஒரு புள்ளி உயர்ந்து 181வது இடத்திலும் உள்ளது.