மனித-யானை மோதல்களுக்கான செயற்கை நுண்ணறிவுக் கண்காணிப்பு
March 17 , 2025 51 days 117 0
கடந்த ஆண்டு இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திரக் கற்றல் சார்ந்தக் கண்காணிப்பு அமைப்பு ஆனது தொடங்கப்பட்டது.
இது இரயில் பாதைகளில் யானைகள் உயிரிழப்பதைத் தடுப்பதற்காக வடிவமைக்கப் பட்டது.
2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட்டதிலிருந்து, இந்தச் செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு அமைப்பு ஆனது, வாளையார்-மதுக்கரை வனப்பகுதியில் வழக்கமான இடம்பெயர்வு பாதையைத் திறம்பட பாதுகாத்து வருகிறது.
குறிப்பிடத்தக்க வகையில், இரண்டு இரயில் பாதைகளிலும் எந்த காட்டு யானைகளும் கொல்லப்படவில்லை என்பதோடு இது யானை பாதுகாப்பிற்கான ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியைக் குறிக்கிறது.
தற்போது, இயக்கப்பட்ட ஓராண்டு கழித்து, எந்த வித யானை விபத்துக்களும் பதிவாக வில்லை என்பதோடு செயற்கை நுண்ணறிவினால் 5,011 எச்சரிக்கைகள் உருவாக்கப் பட்டன மற்றும் 2,500 பாதுகாப்பான யானைக் கடப்பு நிகழ்வுகள் இங்கு நடந்துள்ளன.