TNPSC Thervupettagam

மனித வனவிலங்கு மோதல் திட்டம் - தமிழ்நாடு

October 24 , 2026 15 hrs 0 min 20 0
  • பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் மனித-வனவிலங்கு மோதல்களைக் குறைப்பதற்காக, தமிழ்நாடு அரசு அடுத்த ஐந்து ஆண்டுகளில் (2026–27 முதல் 2030–31 ஆம் ஆண்டு வரை) ₹180 கோடியைச் செலவிட உள்ளது.
  • இத்திட்டமானது கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, சேலம், தேனி, திருநெல்வேலி மற்றும் திருப்பூர் உள்ளிட்ட 11 மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மோதல்கள் அதிகம் நிகழும் 100 கிராமங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.
  • 2026-27 ஆம் ஆண்டிற்கு ₹20 கோடியும், அதைத் தொடர்ந்து வரும் நான்கு ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு ₹40 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • தொங்கும் சூரிய மின்வேலிகள், எஃகு கம்பி-கயிறு வேலிகள், யானைகள் புகாத அகழிகள், தடுப்புகள், தீவன மேம்பாடு மற்றும் நீர் வளத்தைப் பெருக்குதல் ஆகியவை இதற்கான நடவடிக்கைகளில் அடங்கும்.
  • ஜிபிஎஸ் (GPS) வசதி கொண்ட வாகனங்கள், இரவு நேர ரோந்து, கண்காணிப்பு, விரைவான நடவடிக்கை மற்றும் வனவிலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணித்தல் ஆகியவை வலுப்படுத்தப்படும்.
  • 95 வேட்டைத் தடுப்புக் குழுக்கள், கிராம அளவிலான குறுஞ்செய்தி (SMS) முன் எச்சரிக்கை அமைப்புகள், செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான கண்காணிப்பு, ரேடியோ காலர் பொருத்துதல் மற்றும் புவிசார் கண்காணிப்பு ஆகியவை சமூக அடிப்படையிலான மோதல் தணிப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்