தமிழ்நாடு அரசானது, பச்சை முட்டைகளால் செய்யப்பட்ட மயோனைஸ் உற்பத்தி, சேமிப்பு மற்றும் விற்பனையை ஓராண்டிற்குத் தடை செய்துள்ளது.
இந்த வகை மயோனைஸ் ஆனது, உணவு நஞ்சாதல் விளைவினை ஏற்படுத்தக் கூடிய "அதிக ஆபத்து கொண்ட உணவாக" கருதப் படுகிறது.
மயோனைஸ் என்பது "முட்டையின் மஞ்சள் கரு, தாவர எண்ணெய், வினிகர் மற்றும் இதர பிற சுவையூட்டிகளைக் கொண்ட ஷவர்மா போன்ற உணவுப் பொருட்களுடன் பரிமாறப் படும் அரை திண்ம பால்மங்கள் " என்று விவரிக்கப்படுகிறது.
முறையற்றத் தயாரிப்பு மற்றும் சேமிப்பு ஆனது, சால்மோனெல்லா டைஃபிமுரியம், சால்மோனெல்லா என்டெரிடிடிஸ், எஸ்கெரிச்சியா கோலி மற்றும் லிஸ்டீரியா மோனோசைட்டோஜென்கள் ஆகியவற்றின் தாக்கத்திற்கு உட்படுவதால் உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழி வகுக்கிறது.
ஏப்ரல் 08 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த இந்த உத்தரவு ஆனது, 2006 ஆம் ஆண்டு உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டத்தின் 30(2)(a)வது பிரிவின் கீழ் செயல் படுத்தப் பட்டது.