ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மய்யூன் தீவைக் கைப்பற்றி ஏமனின் செங்கடல் கடற்கரை மற்றும் பாப் அல்-மண்டாப் நீர்ச்சந்தி மீது தங்கள் கட்டுப்பாட்டை விரிவுபடுத்தியுள்ளனர்.
மய்யூன் தீவு ஏமனின் பாப் அல்-மண்டாப் நீர்ச்சந்தியில் அமைந்துள்ளது, இது செங்கடல் மற்றும் சூயஸ் கால்வாயின் தெற்கு நுழைவாயிலாகும்.
ஹவுதிகள் கிரேட்டர்/பெரிய ஹனிஷ் மற்றும் லெஸ்ஸர்/சிறு ஹனிஷ் தீவுகள், அண்டை செங்கடல் கடற்கரை மற்றும் ஏமனின் துறைமுக நகரமான மோச்சா ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.
முக்கியமான சர்வதேச கடல்வழிப் பாதையான பாப் அல்-மண்டாப் நீர்ச்சந்தியைச் சுற்றியுள்ள அவர்களின் நிலையை இந்தப் பகுதிகள் வலுப்படுத்துகின்றன.
உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அரேபியா, ஈரானின் ஹார்முஸ் நீர்ச்சந்தி முற்றுகை வளைகுடா வழியாக சரக்குப் போக்குவரத்தை சீர்குலைத்ததை அடுத்து செங்கடல் பாதையை நம்பியுள்ளது.
ஹார்முஸ் நீர்ச்சந்திக்கு அருகே அரபிக்கடலில் ஓமன் கடற்கரையில் எம்டி எல் கையா (MT El Gaia) என்ற வணிகக் கப்பல் மீதான தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்து உள்ளது.