மரபணுப் பன்முகத்தன்மைக்காக புலிகளின் இடமாற்றத் திட்டம்
November 6 , 2024 322 days 380 0
மகாராஷ்டிராவில் உள்ள தடோபா-அந்தாரி புலிகள் வளங்காப்பகத்தில் இருந்து ஒரு பெண் புலியானது ஒடிசாவில் உள்ள சிமிலிபால் புலிகள் வளங்காப்பகத்திற்கு (STR) இடம் மாற்றப்பட்டுள்ளது.
புலிகளின் மீதான இடமாற்றத் திட்டம் ஆனது புலிகள் வளங்காப்பகத்திற்குள் மரபணு வளத்தினை மேம்படுத்துவதற்கான ஒடிசா அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதி ஆகும்.
சிமிலிபால் ஆனது இந்தியாவில் கருநிறமிகள் அதிகம் கொண்ட வங்காளப் புலிகள் காணப் படும் ஒரே காட்டு வாழ்விடமாகும்.
இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஒடிசா புலிகள் மதிப்பீட்டில், சிமிலிபாலில் உள்ள மொத்த 24 இளம் பருவப் புலிகளில் 13 அரிய வடிவங்களைக் கொண்ட கருநிறமிகள் மிக அதிகம் கொண்ட புலிகள் என்று கண்டறியப்பட்டது.