மரபணு இந்தியா முயற்சி என்ற திட்டத்தின் கீழ் உயிரி தொழில்நுட்பத் துறை அடுத்த ஐந்து வருடங்களில் இரண்டு கட்டங்களாக ஏறக்குறைய 20000 இந்திய மரபணுக்களை சோதித்துப் பார்க்க திட்டமிடுகின்றது.
இத்திட்டம் புற்று நோயைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் சோதனை முயற்சிகளை மேம்படுத்த மேற்கொள்ளப் படுகின்றது.
இத்திட்டத்தில் உயிரி-தொழில்நுட்பத் துறையும், இந்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மையத்தையும் சேர்த்து மொத்தம் 22 நிறுவனங்கள் பங்கேற்கும்.
இவ்வாறு உருவாக்கப்படும் தகவல் தேசிய உயிரியல் தகவல் மையத்தின் மூலம் எங்கு வேண்டுமென்றாலும் ஆராய்ச்சியாளர்களுக்கு அணுகிடத் தக்க வகையில் இருக்கும்.