மரபணு மாற்றப்பட்டப் பயிர்களுக்கு, இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள சில கடுமையான கட்டுப்பாடுகளிலிருந்து சில குறியிட்ட வகையிலான மரபணு திருத்தப் பட்ட பயிர் வகைகளுக்கு மட்டும் முதல்முறையாக விலக்கு அளித்து இந்திய அரசு ஆணை ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
இவ்வகைப் பயிர்களை உருவாக்குதல் மற்றும் அதன் ஆராய்ச்சிக்கு இந்த ஆணை ஓர் உத்வேகத்தை அளிக்கும்.
சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகமானது, SDN-1 மற்றும் SDN-2 ஆகிய மரபணு மாற்றப்பட்டத் தாவரங்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் 7 முதல் 11 வரையிலான விதிகளிலிருந்து விலக்கு அளித்துள்ளது.
விதி – 1989 என்ற மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் என்ற விதியின் கீழ் தீங்கு விளைவிக்கக் கூடிய நுண்ணுயிரிகளை அல்லது மரபணு ரீதியில் உருவாக்கப் பட்ட செல்களைத் தயாரித்தல், இறக்குமதி செய்தல் (அ) பயன்படுத்துதல் (அ) ஏற்றுமதி செய்தல் மற்றும் சேமித்தல் போன்றவற்றிற்காக இவற்றிற்கு விலக்கு அளிக்கப்பட்டது.
2020 ஆம் ஆண்டு முதல் நிலுவையிலுள்ள மரபணு மாற்றப்பட்டத் தாவரங்கள் தொடர்பான வழிகாட்டுதல்களுக்கு ஒப்புதல் வழங்கி அறிவிப்பதற்கு இந்த ஆணை அரசிற்கு உதவும்.
2012 ஆம் ஆண்டில் மரபணுத் திருத்த முறையானது கண்டுபிடிக்கப்பட்டது.