TNPSC Thervupettagam

மரபணு மாற்றப்பட்ட உயிரினப் பயிர்கள் (GMO) குறித்த FSSAI வழிகாட்டுதல்கள்

March 10 , 2021 1611 days 644 0
  • இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமானது (FSSAI) இறக்குமதி செய்யப்படும் உணவுப் பயிர்களில் 1% அளவில் மரபணு மாற்றப்பட்ட உயிரிப் பொருட்கள் இருப்பதற்கான அனுமதிக்கப்பட்ட வரம்பை ஏற்படுத்த ஆணை பிறப்பித்துள்ளது.
  • இது உணவு மற்றும் சில இதர நுகர்வுப் பொருட்களில் GMO கூறுகளின் சுழிய (பூஜ்ஜிய) இருப்பிற்கான விவாதத்திற்கு இடமளிக்கின்றது.
  • இறக்குமதி செய்யப்பட்ட நுகர்வுப் பொருட்களில் GMO நிலைகளை ஒழுங்குபடுத்தும் பணியானது தொடக்கத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மரபணுப் பொறியியல் மதிப்பீட்டுக் குழுவின் கீழ் இருந்தது.
  • தற்பொழுது இது 2006 ஆம் ஆண்டு முதல் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள FSSAI அமைப்பின் கட்டுப்பாட்டின்  கீழ் உள்ளது.
  • GMO மூலக்கூறில் மரபணுப் பொருளானது மரபணுப் பொறியியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாற்றியமைக்கப்படும் அல்லது அவை செயற்கையான முறையில் உருவாக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்