- கோழி வளர்ப்பிற்கு உதவும் வகையில் மரபணு மாற்றப்பட்ட சோயா மாவினை இறக்குமதி செய்ய இந்தியா முதன்முறையாக அனுமதித்துள்ளது.
- மும்பையிலுள்ள நவசேவா துறைமுகம் மட்டுமல்லாமல், மும்பைக் கடற்கரைத் துறைமுகம், தூத்துக்குடி கடற்கரைத் துறைமுகம் மற்றும் விசாகப்பட்டினம் கடற்கரைத் துறைமுகம் மூலமாக வணிகர்கள் சோயா மாவினைத் தற்போது இறக்குமதி செய்ய இயலும்.
- அர்ஜென்டினா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்த இறக்குமதிகளை மேற்கொள்ளலாம்.
- சோயா மாவு என்பது அவரை விதையிலிருநது எண்ணெயைப் பிரித்தெடுத்தப் பிறகு எஞ்சிய புரதம் நிறைந்த மூலப்பொருளாகும்.
- மரபணு மாற்றப்பட்ட உயிரி, உயிருள்ள மரபணு மாற்றப்பட்ட உயிரி மற்றும் உயிரற்ற மரபணு மாற்றப்பட்ட உயிரி என 3 வகையான மரபணு மாற்றப்பட்ட உணவுகள் உள்ளன.
- சோயா மாவானது உயிரற்ற மரபணு மாற்றப்பட்ட ஒரு பொருளாகும்.
மரபணு மாற்றப்பட்டப் பயிர்கள்
- மரபணு மாற்றப்பட்டப் பயிர் என்பது நவீன உயிரி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெறப்பட்ட ஒரு புதிய வகை கலப்பினமாகும்.
- இவ்வகைப் பயிர்கள் மகரந்தச் சேர்க்கை மூலம் பெறப்பட்ட ஜீன்களுக்குப் பதிலாக செயற்கையாக உட்சேர்க்கப்பட்ட ஜீன்களைக் கொண்டிருக்கும்.
- மரபணு மாற்றப்பட்டப் பயிர்களை வணிகரீதியாக வெளியிடுவதற்கு அனுமதிக்கச் செய்வதற்கான ஒரு உயர்நிலை அமைப்பு மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு ஆகும்.
- 1986 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், அனுமதிக்கப்படாத மரபணு மாற்றப்பட்ட மாற்றுருக்களைப் பயன்படுத்துதல் என்பது ஒரு தண்டனைக்குரியக் குற்றமாகும்.
- இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட பயிர்களை ஒழுங்குபடுத்துவதற்கான அங்கீகாரம் பெற்ற அமைப்பு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையமாகும்.
