TNPSC Thervupettagam

மரபணு மாற்றம் செய்யப்பட்ட மக்காச்சோளத்தின் கள சோதனைகள் 2025

July 21 , 2025 6 days 51 0
  • லூதியானாவில் உள்ள பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் காரீப் கால (கோடை) பயிர் பருவத்தில் இரண்டு வகையான மரபணு மாற்றம் செய்யப் பட்ட (GM) மக்காச்சோளத்தின் கள சோதனைகள் தொடங்க உள்ளன.
  • இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட (GM) மக்காச் சோள வகையானது களைக் கொல்லி எதிர்ப்புத் திறன் (HT) மற்றும் பூச்சிக்கொல்லி எதிர்ப்புத்திறன் (BT) ஆகிய இரண்டையும் கொண்டுள்ளது.
  • பேயர் நிறுவனத்தினால்  உருவாக்கப்பட்ட இந்த மக்காச்சோள வகையானது BRL-I மற்றும் BRL-II உயிரியல் பாதுகாப்புச் சோதனை கட்டத்தில் உள்ளது.
  • களைக்கொல்லி-தாங்குதிறன் கொண்ட மக்காச்சோள கலப்பினங்களில் கிளைபோ சேட்-கே உப்பைப் பயன்படுத்துவதன் மூலம் களைக்கொல்லி எதிர்ப்புத் திறன் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட லெபிடோப்டிரான் பூச்சிகளிலிருந்து பாதுகாக்கப்பட்ட மக்காச் சோள கலப்பினங்களின் செயல்திறனை இந்த சோதனைகள் ஆய்வு செய்யும்.
  • 2018 ஆம் ஆண்டில், பஞ்சாப் அரசாங்கமானது கிட்டத்தட்ட அனைத்துப் பயிர்களிலும் பல்வேறு வகையான களைகளைக் கட்டுப்படுத்துவதற்காக மாநிலத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படும் கிளைபோசேட் வகை களைக்கொல்லியின் விற்பனையைத் தடை செய்தது.
  • பஞ்சாப் மாநில அரசாங்கத்திடமிருந்து ஒப்புதல் பெற்ற பிறகு, மரபணுப் பொறியியல் மதிப்பீட்டுக் குழு (GEAC) ஆனது சோதனைகளுக்கு ஒப்புதல் அளித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த கள சோதனைகள் நடைபெற்றன.
  • சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தில் (MoEF&CC) செயல் படுகின்ற GEAC ஆனது மரபணு மாற்றப்பட்டப் பயிர்கள் துறைக்கான நாட்டின் உயர் மட்ட ஒழுங்குமுறை அமைப்பாகும்.
  • GEAC என்பது 1986 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் உருவாக்கப் பட்ட சட்டப்பூர்வக் குழுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்