மரப் பொருட்கள் அடிப்படையிலான வணிகங்கள் வளர உதவும் வகையில் வேளாண் நிலங்களில் மரங்களை வெட்டுவதற்கான சில புதிய விதிகளை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
இந்த விதிகள் ஆனது மர வளர்ப்பை (வேளாண் காடுகள்) ஆதரிக்கின்றன மற்றும் அதன் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக உள்ளூர் மர உற்பத்தியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இது இறக்குமதி செய்யப்பட்ட மரங்களின் மீதான தேவையைக் குறைக்கவும், அம்மரப் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்கவும் உதவும்.
வேளாண் காடுகள் வளர்ப்பை ஊக்குவித்தல் மற்றும் மரப் பொருட்கள் சார்ந்த சில எளிதான விதிகளை உருவாக்குவதற்கு மாநில அளவிலான ஒரு குழு மாநிலங்களுக்கு வழிகாட்டும்.
விவசாயிகள் மற்றும் வணிகர்கள் நிலம், மர இனங்கள் மற்றும் மரக்கன்றுகள் நடவு செய்யப் பட்ட காலம் போன்ற விவரங்களுடன் தங்கள் தோட்ட வளர்ப்பு குறித்து தேசிய மர மேலாண்மை அமைப்பு (NTMS) தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இந்த முன்னெடுப்பானது வேளாண் வருமானத்தை இரட்டிப்பாக்குவதையும் நிலத்தின் நிலையான பயன்பாட்டை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.