TNPSC Thervupettagam

மருத்துவக் கருக் கலைப்பு (திருத்தம்) மசோதா, 2020

January 31 , 2020 1928 days 876 0
  • மருத்துவக் கருக் கலைப்பு (திருத்தம்) மசோதா, 2020 என்ற ஒரு மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த மசோதாவானது மருத்துவக் கருக் கலைப்புச் சட்டம், 1971 என்ற ஒரு சட்டத்தைத் திருத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த மசோதாவின் படி, கருக் கலைப்பானது 24 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட இருக்கின்றது. இது முன்னர் 20 வாரங்களாக இருந்தது.
  • இந்த நீட்டிப்பானது சிறப்பு வகையைச் சேர்ந்த பெண்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றது. பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்கள், பாலியல் பலாத்காரத்தில் இருந்து மீண்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிப் பெண்கள் போன்ற பிற பாதிக்கப்படக்கூடிய பெண்கள் இதில் அடங்குவர்.
  • இந்தத் திருத்தங்கள் ஆனது மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகத்தால் முன்மொழியப் பட்டுள்னன.
  • இந்தியாவில் கருக் கலைப்பின் சமூக - கலாச்சார மற்றும் மருத்துவம் சார்ந்த அம்சங்களை மறுஆய்வு செய்வதற்காக ஷா குழு அமைக்கப்பட்டுள்ளது.
  • இந்தக் குழுவானது முதல் முறையாக கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கப் பரிந்துரைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்