மருத்துவச் சேர்க்கையில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு
July 30 , 2020 1843 days 641 0
மருத்துவச் சேர்க்கையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (OBCs - Other Backward Classes) இடஒதுக்கீட்டின் பயன்களை நீட்டிப்பதற்கு எந்தவொரு அரசியலமைப்பு ரீதியிலான மற்றும் சட்டரீதியிலான தடை இல்லை என்று மதராஸ் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
OBCகளுக்கான இட ஒதுக்கீடானது மாநில அரசுகளினால் நிர்வகிக்கப்படும் மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளினால் அகில இந்திய இடஒதுக்கீட்டிற்கு (AIQ - All India Quota) அளிக்கப்படும் மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்வி இடங்களுக்கான சேர்க்கைக்கு நீட்டிக்க முடியும் என்று இந்தத் தீர்ப்பு கூறுகின்றது.
அடுத்த ஆண்டிலிருந்து OBC இடஒதுக்கீட்டிற்கான விதிமுறைகள் மற்றும் அதற்கான சதவிகிதத்தை நிர்ணயிப்பதற்காக ஒரு குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசிற்கு நீதிபதிகள் அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளனர்.
AIQ என்பது 1986 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வழங்கப்பட்ட ஒரு இந்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் உருவாக்கப்பட்டதாகும்.
அதன்படி, மாநில அரசுகள் இளநிலைப் படிப்பில் 15% மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்வி இடங்களையும் 50% முதுகலை மருத்துவக் கல்வி இடங்களையும் AIQற்கு ஒப்படைக்கத் தொடங்கின.
அது வரையில், மாநில அரசு மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அனைத்து கல்வி இடங்களையும் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களைக் கொண்டு மட்டுமே நிரப்பியது.