மருத்துவத் தயாரிப்புகளுக்கான அணுகல் குறித்த உலக மாநாடு
November 21 , 2019 2092 days 738 0
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ வர்தன் புது தில்லியில் ‘மருத்துவ தயாரிப்புகளுக்கான அணுகல்: நீடித்த வளர்ச்சி இலக்குகள் 2030ஐ அடைதல்’ என்பது குறித்த 2019 ஆம் ஆண்டிற்கான உலக மாநாட்டைத் திறந்து வைத்தார்.
இதை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
பின்வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே இந்த மாநாட்டின் நோக்கமாகும்.
அனைவருக்குமான சுகாதாரப் பாதுகாப்பு.
நீடித்த வளர்ச்சி இலக்குகள் 2030.
மருத்துவ தயாரிப்புகளுக்கான அணுகலை ஊக்குவிக்க அறிவுசார் சொத்துரிமையின் பங்கு.