மருத்துவப் பயன்பாட்டு வெப்பமானிகளுக்கான புதிய விதிகள்
December 17 , 2024 219 days 221 0
2011 ஆம் ஆண்டு சட்ட அளவியல் (பொது) விதிகளின் கீழ் OIML பரிந்துரைகளின்படி நுகர்வோர் விவகாரத் துறை இந்தத் திருத்தத்தினை முன்மொழிந்துள்ளது.
இந்த விதிகள் ஆனது, மருத்துவ மின் வெப்பமானிகளின் துல்லியம் மற்றும் நம்பகத் தன்மையை தரநிலைப்படுத்துகிறது.
இந்தச் சாதனங்கள் பரிந்துரைக்கப்பட்டத் தரங்களுக்கு நன்கு இணங்கும் வகையில் இருப்பதை உறுதி செய்வதற்காக அவற்றைச் சரிபார்த்தல் மற்றும் முத்திரையிடுதல் தொடர்பான விதிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
முன்மொழியப்பட்ட இந்த விதிகள் ஆனது, நோயறிதல் மற்றும் சிகிச்சை முடிவுகள் ஆகியவை நம்பகமான தரவுகளின் அடிப்படையில் இருப்பதை உறுதி செய்வதற்காக அவற்றின் அளவீடுகளில் ஒரு நம்பகத் தன்மையினை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.