மத்திய அரசானது ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் 4 மருத்துவச் சாதனப் பூங்காக்களை அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
நாட்டின் முதலாவது மருத்துவப் பூங்காவானது கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள தூணக் கல்லில் அமைக்கப்படவுள்ளது.
இது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஒரு தன்னாட்சி மையமான சித்திரைத் திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் & கேரள மாநிலத் தொழிற்சாலை மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றின் ஒரு கூட்டு முயற்சியாகும்.