TNPSC Thervupettagam

மருத்துவ மற்றும் பல்மருத்துவக் கல்லூரிகளில் இடஒதுக்கீடு

August 2 , 2021 1474 days 574 0
  • அகில இந்திய இட ஒதுக்கீட்டுத் திட்டத்தின் (All India Quota – AIQ) கீழ், மருத்துவ மற்றும் பல்மருத்துவத்திற்கான இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளுக்கு இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீட்டினையும் பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீட்டினையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • அரசு மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளின் இளங்கலைப் படிப்பில் 15% இடமும் முதுகலைப் படிப்பில் 50% இடமும் வேற்று மாநில மாணவர்களின் சேர்க்கைக்காக குடியிருப்புத் தகுதி தேவையற்ற இடங்களாக ஒதுக்கப்பட்டுள்ளன.
  • மீதமுள்ள இடங்கள் ஆனது அந்தந்த மாநிலத்தின் மாணவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப் பட்டுள்ளன.
  • AIQ திட்டமானது உச்சநீதிமன்றத்தின் ஆணையின் கீழ் 1986 ஆம் ஆண்டில் அறிமுகப் படுத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்