TNPSC Thervupettagam

மருந்துகள் விதிகள், 1945-இல் திருத்தம்

July 7 , 2026 7 hrs 0 min 27 0
  • மேம்பட்ட செல், ஸ்டெம் செல், மரபணு சிகிச்சை தயாரிப்புகள் மற்றும் செனோ கிராஃப்ட்ஸ் (அயலின ஒட்டுறுப்புகள்) ஆகியவற்றை ஒரே சீரான மத்திய ஒழுங்குமுறை அமைப்பின் கீழ் கொண்டு வர, மருந்துகள் விதிகள், 1945-ஐ அரசாங்கம் திருத்தி உள்ளது.
  • இந்த திருத்தமானது உரிமம் வழங்குதல் மற்றும் ஒழுங்குபடுத்துதலுக்காக இந்தத் தயாரிப்புகளை மத்திய உரிமம் வழங்கும் ஒப்புதல் அதிகார அமைப்பின் (CLAA) கீழ் கொண்டு வருகிறது.
  • CLAA என்பது இந்தியாவின் தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார அமைப்பான மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (CDSCO) ஒரு பிரிவாகும்.
  • மரபணு சிகிச்சை தயாரிப்புகள் நோய்களுக்கு சிகிச்சையளிக்க அல்லது தடுக்க மரபணுக்களைப் பயன்படுத்துகின்ற அதே நேரத்தில் ஸ்டெம் செல் சார்ந்த தயாரிப்புகள் மருத்துவ சிகிச்சைக்காக ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி தயாரிக்கப் படுகின்றன.
  • செனோகிராஃப்ட்ஸ் (அயலின ஒட்டுறுப்புகள்) என்பது ஒரு இனத்திலிருந்து (பன்றிகள் போன்றவை) மற்றொரு இனத்திற்கு (மனிதர்கள் போன்றவை) மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும் உறுப்புகள் அல்லது திசுக்கள் ஆகும்.
  • இந்தியா முழுவதும் மேம்பட்ட சிகிச்சைகளின் சீரான ஒழுங்குமுறை, பாதுகாப்பு, தரம் மற்றும் கண்காணிப்பை உறுதி செய்வதை இத்திருத்தம் நோக்கமாகக் கொண்டு உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்