மருந்து கண்டுபிடிப்புக்கான செயற்கை நுண்ணறிவு கட்டமைப்பு
November 7 , 2025 13 days 54 0
வாத்வானி செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் பள்ளி, இந்தியத் தொழில் நுட்ப கல்விக் கழகம் - மதராஸ் (IIT-M) மற்றும் தி ஓஹியோ மாநில பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் PURE என்ற செயற்கை நுண்ணறிவுக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளனர்.
PURE என்பது கட்டமைப்பு சார்ந்து கட்டுப்படுத்தப்பட்ட மூலக்கூறு உருவாக்கத்திற்கான கொள்கை சார் வழிகாட்டுதல் கொண்ட பாரபட்சமற்றப் பிரதிநிதித்துவம் என்பதைக் குறிக்கிறது.
இந்தக் கட்டமைப்பு ஆனது ஓர் ஆய்வகத்தில் உருவாக்குவதற்கு எளிதான மருந்துகள் போன்ற மூலக்கூறுகளை உருவாக்குகிறது.
PURE ஆனது பல தசாப்தங்கள் ஆகின்ற மற்றும் மில்லியன் கணக்கான டாலர்கள் செலவாகின்ற ஆரம்பக் கட்ட மருந்து உருவாக்கக் காலத்தினைக் குறைப்பதாக உறுதியளிக்கிறது.
இந்த அமைப்பு ஆனது, உண்மையான உருவாக்கப் பாதைகளில் மூலக்கூறு உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டது மற்றும் மிகவும் சாத்தியமான உருவாக்க வழிகளைப் பரிந்துரைக்க தானாகவே வேதியியல் ஒற்றுமையைக் கற்கிறது.