மறைந்த மத்திய அமைச்சர்களின் பெயர் இடப்பட்ட தேசிய நிறுவனங்கள்
February 20 , 2020 1995 days 572 0
இந்திய அரசு மறைந்த அமைச்சர்களின் நினைவாக தேசிய நிறுவனங்களுக்குப் பெயர் மாற்றம் செய்துள்ளது.
உடல் நலமின்மை காரணமாகப் பின்வரும் தலைவர்கள் 2019 ஆம் ஆண்டில் காலமானார்கள்.
அவர்கள் மனோகர் பாரிக்கர், அருண் ஜெட்லி மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோராவர்.
பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வு நிறுவனமானது (Institute of Defence studies and Analyses - IDSA) மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு ஆய்வு நிறுவனம் என மறுபெயரிடப் பட்டுள்ளது.
அவரது மிகப்பெரிய பங்களிப்பு இந்திய இராணுவத்தினருக்கான “ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம்” என்ற திட்டமாகும்.
புதுதில்லியில் உள்ள பிரவாசி பாரதிய மையம் மற்றும் வெளியுறவு நிறுவனம் முறையே சுஷ்மா ஸ்வராஜ் பவன் மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் வெளியுறவு சேவை நிறுவனம் என்று மறுபெயரிடப் ட்டுள்ளது.
தேசிய நிதி மேலாண்மை நிறுவனமானது அருண் ஜெட்லி தேசிய நிதி மேலாண்மை நிறுவனம் என்று மறுபெயரிடப் பட்டுள்ளது.
மேலும், 2019 ஆம் ஆண்டு செப்டம்பரில், தில்லியில் உள்ள ஃபெரோஷா கோட்லா கிரிக்கெட் மைதானமானது அருண் ஜெட்லி விளையாட்டரங்கம் என்று மறுபெயரிடப் பட்டுள்ளது.