மலேரியாவைக் கண்டறியும் செயற்கை நுண்ணறிவைக் கொண்ட அமைப்பு
March 28 , 2019 2413 days 788 0
ஐஐடி - தில்லியானது கண நேரத்தில் மலேரியா, காச நோய், குடல் ஒட்டுண்ணி மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஆகியவற்றை அறிவதற்காக செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மின்னணு வன்பொருள் அமைப்பை வடிவமைத்துள்ளதாகக் கூறியுள்ளது.
இது கண நேரத்திற்குள் நோய் குறித்த பாங்கைக் கண்டறிந்து துல்லியமான முடிவை அளிக்க வல்லது.
இது நோயாளியின் இரத்த மாதிரிகள், அமைப்புகள் ஆகியவற்றிலிருந்து தரவுகளைப் பெறுதல் மற்றும் அவற்றிலிருந்து தகவலை எடுத்தல் ஆகியவற்றை மேற்கொள்ளக்கூடிய நோயறிதல் ஆதரவு அமைப்பை மேம்படுத்துவதற்காக நேனோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.