இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றமானது (ICMR - Indian Council of Medical Research) இந்திய “மலேரியா நோய் ஒழிப்பு ஆராய்ச்சிக் கூட்டிணைவைத்” (MERA - Malaria Elimination Research Alliance) தொடங்கியுள்ளது.
2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 25 அன்று உலக மலேரிய தினக் கொண்டாட்டத்தின் போது இந்தக் கூட்டிணைவு தொடங்கப்பட்டது.
”கொசுவின் மூலம் பரப்பப்படும் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய திட்டமானது” (NVBDCP - National Vector Borne Diseases Control Program) 2030-ஆம் ஆண்டில் மலேரிய நோயற்ற இந்தியாவை உருவாக்க எண்ணுகின்றது.
NVBDCP ஆனது மலேரியாவை ஒழிப்பதற்கான ஆராய்ச்சி சார்ந்த திட்டங்களின் மீது கவனத்தைச் செலுத்துகின்றது.
மேரா இந்தியா என்பது மலேரியாவை ஒழிப்பதற்காக ஆராய்ச்சிகளை அதிகரிக்கவும் அதற்காக திட்டமிடவும் இணைந்துப் பணியாற்ற பங்களிப்பாளர்கள் ஒன்று கூடுவதாகும்.