TNPSC Thervupettagam

மலேரியா மற்றும் இந்தியா – 4வது இடம்

September 13 , 2019 2116 days 712 0
  • சமீபத்தில் வெளியிடப்பட்ட லான்செட் ஆணையத்தின் அறிக்கையின்படி, உலகில் மலேரியா நோய்ப் பாதிப்புகளின் எண்ணிக்கையில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.
  • 2017 ஆம் ஆண்டில்  நிகழ்ந்த 219 மில்லியன் மலேரிய நோய்ப் பாதிப்புகளில், 9.6 மில்லியன் நோய்ப் பாதிப்புகள் இந்தியாவில் நிகழ்ந்தன.
  • இந்தப் பட்டியலில் இந்தியாவிற்கு முன்பு நைஜீரியா, காங்கோ மக்களாட்சிக் குடியரசு மற்றும் மொசாம்பிக் ஆகிய நாடுகள் உள்ளன.
  • உலகின் பிற பகுதிகளில், மலேரியா ஒரு முதன்மையான  கிராமப்புற நோயாக இருக்கின்றது. ஆனால் "நகர்ப்புற மலேரியா" நோய்ப் பாதிப்புகள்  ஏற்பட்ட ஒரே நாடு இந்தியா ஆகும்.
  • 2017 ஆம் ஆண்டில், 71 சதவீத மலேரியா நோய்ப் பாதிப்புகள் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் நிகழ்ந்தன.
  • இந்தியாவில் உள்ள ஒரு முக்கியமான மலேரியா நோய்ப் பரப்பியான ‘அனோபிலிஸ் ஸ்டீபன்சி’ இந்திய நகர்ப்புற சூழல்களுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்