17வது மக்களவையின் முதலாவது கூட்டத் தொடர் 2019 ஆம் ஆண்டு ஜுன் 17 அன்று கூடியது. மாநிலங்களவையின் 249வது கூட்டத் தொடர் 2019 ஆம் ஆண்டு ஜுன் 20 அன்று கூடியது.
2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 06 அன்று மக்களவையானது தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 07 அன்று மாநிலங்களவையானது தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
2019-20 ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையானது 2019 ஆம் ஆண்டு ஜூலை 05 அன்று சமர்ப்பிக்கப்பட்டது.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசின் முதலாவது கூட்டத் தொடர் பட்ஜெட் கூட்டத் தொடர் என்றும் அழைக்கப்படுகின்றது.
மக்களவையின் பட்ஜெட் கூட்டத் தொடரானது 37 அமர்வுகளில் பங்கு பெற்று, 280 மணி நேரங்கள் செயல்பட்டுள்ளது.
இக்கூட்டத் தொடரின்போது மொத்தம் 40 மசோதாக்கள் (மக்களவையில் 33 மற்றும் மாநிலங்களவையில் 07) அறிமுகப்படுத்தப்பட்டன.
30 மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்டுள்ளன. புதிய மக்களவை பதவியேற்ற பின்பு அதிக திறனுடன் செயல்பட்ட ஒரே கூட்டத் தொடர் இதுவாகும்.
1952 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை விட அதிக எண்ணிக்கையிலான மசோதாக்கள் இக்கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
1952 ஆம் ஆண்டு முதலாவது மக்களவையின் முதலாவது கூட்டத் தொடரின் போது, இந்த அவை 67 அமர்வுகளில் பங்கு பெற்று, 24 மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக அதிகமாக மக்களவையின் செயல்பாட்டுத் திறன் 135 சதவீதமாகவும் மாநிலங்களவையின் செயல்பாட்டுத் திறன் 100 சதவீதமாகவும் உள்ளது.