மாட்ரிட் நகரின் பேசியோ டெல் பிராடோ மற்றும் ரெட்டிரோ பூங்கா – உலகப் பாரம்பரியத் தள அந்தஸ்து
July 29 , 2021 1477 days 530 0
ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட்டிலுள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பேசியோ டெல் பிராடோ பவுல்வர்டு (Paseo del Prado boulevard) மற்றும் ரெட்டிரோ பூங்காவிற்கு யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தளம் எனும் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டின் தலைநகரின் மையப்பகுதியில் அமைந்த பரந்து விரிந்த மரங்கள் நிரம்பிய பேசியோ டெல் பிராடோ பூங்காவானது பிராடோ அருங்காட்சியம் போன்ற பல கட்டிடங்களைக் கொண்டதாகும்.
பேசியோ டெல் பிராடோவிற்கு அருகில் அமைந்த தனிச்சிறப்பு மிக்க ரெட்டிரோ பூங்காவானது 125 ஹெக்டேர் பரப்பளவிலான ஒரு பசுமை நிரம்பிய இடமாகும்.
இது மாட்ரிட் நகரின் வரலாற்றிலேயே அதிக பார்வையாளர்கள் வருகை புரிந்த ஒரு இடமாகும்.