மாணவர்களுக்கு இரண்டு முழு நேரக் கல்விப் படிப்புகள்
April 15 , 2022 1209 days 471 0
பல்கலைக்கழக மானியக் குழுவானது, மாணவர்கள் தற்போது இரண்டு முழுநேரக் கல்விப் படிப்புகளை நேரடி முறையில் தொடர முடியும் என்று அறிவித்தது.
நாடு முழுவதும் உள்ள அனைத்துப் படிப்புகளுக்கும் இந்த வழிகாட்டுதல்கள் பொருந்தும்.
மாணவர்கள் பட்டயக் கல்வி மற்றும் இளங்கலைப் பட்டம், இரண்டு முதுகலைக் கல்வி அல்லது இரண்டு இளங்கலைக் கல்வி ஆகியவற்றின் சேர்க்கையில் ஒன்றைத் தேர்வு செய்யலாம்.
ஒரு மாணவர் முதுகலை பட்டப்படிப்பைத் தொடர தகுதியுடையவராக இருந்து, மேலும் வேறு ஒரு பிரிவில் இளங்கலைப் பட்டப்படிப்பில் சேர விரும்பினால், அவர் ஒரே நேரத்தில் இளங்கலை மற்றும் முதுகலை ஆகிய இரு பட்டப் படிப்புகளையும் தொடர முடியும்.