மாதவிடாய் நிறுத்த நிலைக்கான மருந்து வியோசா - ஐக்கியப் பேரரசு
December 22 , 2023 512 days 272 0
வியோசா அல்லது ஃப்பெசோலினேடன்ட் என்று பெயரிடப்பட்ட மருந்து, ஐக்கியப் பேரரசின் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை நிறுவனத்தின் அங்கீகாரத்தினைப் பெற்றுள்ளது.
இது மாதவிடாய் நிறுத்த (மெனோபாஸ்) காலத்தில் திடீர்க் காய்ச்சல் நிலையுடன் போராடும் லட்சக்கணக்கான பெண்களுக்கு நிவாரணம் அளிக்கக் கூடிய ஒரு மருந்து ஆகும்.
தற்போது, ஹார்மோன் மாற்று சிகிச்சை (HRT) என்பது திடீர்க் காய்ச்சல் நிலைக்கு வழங்கப் படும் மிகப் பயனுள்ள சிகிச்சையாகும்.
ஹார்மோன் சாராத மாதவிடாய் நிறுத்த நிலை மருந்தான வியோசா, நியூரோகினின் -3 எனப்படும் புரதத்தைத் தடுப்பதன் மூலம் திடீர் காய்ச்சல் நிலை ஏற்படுவதைத் தடுப்பதற்காக நேரடியாக மூளையைச் சென்றடைகிறது.