TNPSC Thervupettagam

மாதிரி இளையோர் கிராம சபை – லோக் தந்திர கி பாத்ஷாலா

November 7 , 2025 5 days 45 0
  • மாதிரி இளையோர் கிராம சபை (MYGS) ஆனது, உண்மையான கிராம சபை செயல்முறைகளை உருவகப்படுத்துவதன் மூலம் அடித்தட்டு நிலையிலான ஜனநாயகத்தில் மாணாக்கர்களுக்கு நேரடி அனுபவத்தை வழங்குகிறது.
  • இது பஞ்சாயத்து ராஜ் அமைப்பு குறித்த இளைஞர்களின் புரிதலை வலுப்படுத்துகிறது மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, உள்ளடக்கம் மற்றும் பொறுப்புணர்வை ஊக்குவிக்கிறது.
  • இந்த முன்னெடுப்பு 2020 ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையுடன் (NEP) இணைந்து, மாணாக்கர்களிடையே அரசியலமைப்பு விழுமியங்கள், சமூகப் பொறுப்பு மற்றும் குடிமை உணர்வை வளர்க்கிறது.
  • ஜவஹர் நவோதயா வித்யாலயாக்கள் (JNV) மற்றும் ஏக்லவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளிகள் (EMRS) மாணாக்கர்கள் பங்கேற்பு ஆளுகையைப் புரிந்து கொள்வதற்காக பாத்திரமேற்று நடித்தல், விவாதங்கள் மற்றும் முடிவெடுக்கும் செயல்முறைப் பயிற்சிகளில் பங்கேற்கின்றனர்.
  • MYGS தொகுதிகள் ஆனது பொருள், கற்றல், மகிழ்ச்சி மற்றும் பெருமை (MLJP) மற்றும் தேசிய அளவிலான முதன்மை பயிற்சியாளர் வழிகாட்டிகள், ஆசிரியர்களுக்கான உதவி தொகுதிகள் மற்றும் மதிப்பீட்டுக் கட்டமைப்பு ஆகியவற்றினை உள்ளடக்கிய MLJP கட்டமைப்பைப் பின்பற்றுகின்றன.
  • பங்கேற்கும் பள்ளிகள் நிதி உதவியைப் பெறுகின்றன என்பதோடு மேலும் மாணாக்கர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
  • ஜனநாயகப் பங்கேற்பு மற்றும் நிலையான உள்ளூர் மேம்பாட்டிற்கு உறுதியளிக்கும் அதிகாரம் பெற்ற, தகவலறிந்த மற்றும் பொறுப்புள்ள இளம் குடிமக்களை உருவாக்குவதே MYGS முன்னெடுப்பின் நோக்கமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்