மாதிரி இளையோர் கிராம சபை – லோக் தந்திர கி பாத்ஷாலா
November 7 , 2025 301 days 322 0
மாதிரி இளையோர் கிராம சபை (MYGS) ஆனது, உண்மையான கிராம சபை செயல்முறைகளை உருவகப்படுத்துவதன் மூலம் அடித்தட்டு நிலையிலான ஜனநாயகத்தில் மாணாக்கர்களுக்கு நேரடி அனுபவத்தை வழங்குகிறது.
இது பஞ்சாயத்து ராஜ் அமைப்பு குறித்த இளைஞர்களின் புரிதலை வலுப்படுத்துகிறது மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, உள்ளடக்கம் மற்றும் பொறுப்புணர்வை ஊக்குவிக்கிறது.
இந்த முன்னெடுப்பு 2020 ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையுடன் (NEP) இணைந்து, மாணாக்கர்களிடையே அரசியலமைப்பு விழுமியங்கள், சமூகப் பொறுப்பு மற்றும் குடிமை உணர்வை வளர்க்கிறது.
ஜவஹர் நவோதயா வித்யாலயாக்கள் (JNV) மற்றும் ஏக்லவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளிகள் (EMRS) மாணாக்கர்கள் பங்கேற்பு ஆளுகையைப் புரிந்து கொள்வதற்காக பாத்திரமேற்று நடித்தல், விவாதங்கள் மற்றும் முடிவெடுக்கும் செயல்முறைப் பயிற்சிகளில் பங்கேற்கின்றனர்.
MYGS தொகுதிகள் ஆனது பொருள், கற்றல், மகிழ்ச்சி மற்றும் பெருமை (MLJP) மற்றும் தேசிய அளவிலான முதன்மை பயிற்சியாளர் வழிகாட்டிகள், ஆசிரியர்களுக்கான உதவி தொகுதிகள் மற்றும் மதிப்பீட்டுக் கட்டமைப்பு ஆகியவற்றினை உள்ளடக்கிய MLJP கட்டமைப்பைப் பின்பற்றுகின்றன.
பங்கேற்கும் பள்ளிகள் நிதி உதவியைப் பெறுகின்றன என்பதோடு மேலும் மாணாக்கர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
ஜனநாயகப் பங்கேற்பு மற்றும் நிலையான உள்ளூர் மேம்பாட்டிற்கு உறுதியளிக்கும் அதிகாரம் பெற்ற, தகவலறிந்த மற்றும் பொறுப்புள்ள இளம் குடிமக்களை உருவாக்குவதே MYGS முன்னெடுப்பின் நோக்கமாகும்.