இந்திய அரசியலமைப்பின் 80(3) வது சரத்தின் கீழ் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் நான்கு புகழ்பெற்ற நபர்களை மாநிலங்களவைக்கு உறுப்பினர்களாக நியமித்துள்ளார்/பரிந்துரைத்துள்ளார்.
உஜ்வால் நிகம் - சட்டம் மற்றும் சமூக நீதித் துறையில் ஆற்றிய சேவை.
சதானந்தன் மாஸ்டர் - சமூக சேவையில் அடிமட்ட அளவிலான பணி.
ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா - இந்தியாவின் முன்னாள் வெளியுறவு செயலாளர்.
டாக்டர் மீனாட்சி ஜெயின் - இந்திய வரலாறு மற்றும் இலக்கியத்திற்கான அறிவார்ந்தப் பங்களிப்புகள்.
80வது சரத்தின் (1) வது பிரிவின் (a) துணைப் பிரிவின் கீழ் அமைச்சர்கள் குழுவின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவரால் இந்தப் பரிந்துரைகள் மேற்கொள்ளப் பட்டன.
இலக்கியம், அறிவியல், கலை அல்லது சமூக சேவையில் சிறப்பு அறிவு அல்லது நடைமுறை அனுபவம் உள்ள தனிநபர்களின் 12 பரிந்துரைகளை இந்த சரத்து அனுமதிக்கிறது.
இராஜ்யசபாவானது (மாநிலங்களவை) அதிகபட்சம் 238 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.