TNPSC Thervupettagam

மாநிலங்களின் நிதிநிலை அறிக்கைக் கணக்கின் வரவு சாராக் கடன்கள்

August 22 , 2025 17 hrs 0 min 48 0
  • 2024 ஆம் நிதியாண்டில் 21,251 கோடி ரூபாயாக இருந்த நிதிநிலை அறிக்கைக் கணக்கின் வரவு சாராக் கடன்கள் (OBB) 2025 ஆம் நிதியாண்டில் 29,335 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில், 2021 ஆம் நிதியாண்டில் நிதிநிலை அறிக்கைக் கணக்கின் வரவு சாராக் கடன்கள் 67,181 கோடி ரூபாயாக உயர்ந்தன.
  • 2023 ஆம் நிதியாண்டில் இருந்து மத்திய அரசு அதன் சொந்த நிதிநிலை அறிக்கைக் கணக்கின் வரவு சாராக் கடன் வாங்கும் நடைமுறைகளை நிறுத்தியது.
  • மத்திய அரசு ஆனது 2022 ஆம் நிதியாண்டு முதல், 293(3) சரத்தின் கடன் வரம்புகளின் கீழ் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களால் திரட்டப்பட்ட கடனைச் சேர்த்துள்ளது.
  • 50 ஆண்டு வட்டி இல்லாத கடன்களை வழங்கும் மத்திய அரசின் மூலதன முதலீட்டுக்கான மாநிலங்களுக்கான சிறப்பு உதவி (SASCI) திட்டத்தை மாநிலங்கள் தேர்வு செய்கின்றன.
  • 13 முக்கிய மாநிலங்களின் நிதிநிலை அறிக்கைகள் 2026 ஆம் நிதியாண்டில் 3.2% நிதிப் பற்றாக்குறை இருக்கும் என்று கணிக்கின்றன என்று கேர்எட்ஜ் மதிப்பீடுகள் அறிக்கை கூறுகிறது.
  • 2025 ஆம் நிதியாண்டில் மகாராஷ்டிரா 13,990 கோடி ரூபாய்  என்ற அளவில் நிதிநிலை அறிக்கைக் கணக்கின் வரவு சாராக் கடன்களைக் கொண்டு முதலிடத்தில் உள்ளது அதைத் தொடர்ந்து 5,438 கோடி ரூபாயுடன் கர்நாடகா உள்ளது.
  • தெலுங்கானா மற்றும் கேரளா ஆகியவை முறையே 2025 ஆம் நிதியாண்டில் 2,697 கோடி ரூபாய் மற்றும் 983 கோடி ரூபாய் அளவிலான நிதிநிலை அறிக்கைக் கணக்கின் வரவு சாராக் கடன்களை கொண்டுள்ளன.
  • 2024 ஆம் நிதியாண்டில், மகாராஷ்டிராவில் 7,700 கோடி ரூபாய் என்ற அளவில் நிதி நிலை அறிக்கைக் கணக்கின் வரவு சாராக் கடன்கள் இருந்தன அதைத் தொடர்ந்து கேரளா 4,688 கோடி ரூபாய் என்ற அளவில் கொண்டிருந்தது.
  • மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் மத்திய அரசின் நிதிப் பரிமாற்றங்களைப் பெரிதும் சார்ந்துள்ளன.
  • ஹரியானா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா போன்ற செல்வ வளம் மிக்க மாநிலங்கள் தங்கள் வருவாய் மூலம் பெரும்பாலான நிதி ஒதுக்கீடுகளுக்கு நிதியளிக்கின்றன.
  • மாநில அரசுகள் ஆனது, நிதிப் பற்றாக்குறை இலக்குகளை மீறாமல் நலத் திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்புக்கு நிதியளிக்க நிதிநிலை அறிக்கைக் கணக்கின் வரவு சாராக் கடன்களைப் பயன்படுத்துகின்றன.
  • 2025 ஆம் நிதியாண்டில் திறந்த சந்தை ஆதாரங்கள் மூலம் மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகியவை தலா 1.2 லட்சம் கோடி ரூபாக்கு மேல் கடன் வாங்கியுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்