TNPSC Thervupettagam

மாநிலங்களின் நிதி குறித்த அறிக்கை 2025

November 13 , 2025 2 days 40 0
  • மாநிலங்கள் கூட்டாக தங்கள் மொத்த நிதிப் பற்றாக்குறையை (GFD) FRBM (நிதிப் பொறுப்பு மற்றும் நிதி ஒதுக்கீடு மேலாண்மை) நிர்ணயித்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% என்ற இலக்கிற்கு சற்று அருகில் பேணியுள்ளன.
  • 2024-25 ஆம் நிதியாண்டில், GFD ஆனது நிர்வகிக்கக் கூடிய வரம்பிற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.2% உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • 2024-25 ஆம் ஆண்டில், மாநிலங்களின் மூலதனச் செலவினம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.1 சதவீதத்தினை எட்டியுள்ளது.
  • 2023-24 ஆம் ஆண்டில், மாநிலங்கள் தங்கள் வருவாய் வரவுகளில் 62 சதவீதத்தினை வட்டி செலுத்துதல், சம்பளம், ஓய்வூதியம் மற்றும் மானியங்களுக்காக மொத்தமாக செலவிட்டன.
  • மாநிலங்களின் நிலுவையில் உள்ள கடன் அளவு (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 28.5%) FRBM இலக்கான 20 சதவீதத்தினை விடக் கணிசமாக அதிகமாக உள்ளது.
  • குஜராத், மகாராஷ்டிரா மற்றும் ஒடிசாவைத் தவிர, பெரும்பாலான மாநிலங்களின் அளவுகள் இந்த வரம்பை மீறுகின்றன.
  • பஞ்சாப், கேரளா மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் கணிசமாக அதிக கடன் அளவுகளைக் கொண்டுள்ளன.
  • 2025–26 ஆம் நிதியாண்டு நிலவரப்படி, 12 மாநிலங்கள் பெண்களுக்கு நிபந்தனையற்ற பணப் பரிமாற்றத் திட்டங்களைத் தொடங்கியுள்ளன.
  • மொத்தத்தில், 2025-26 ஆம் ஆண்டில் மாநிலங்கள் 58% வருவாய் ரசீதுகளை சொந்த வரி மற்றும் சொந்த வரி அல்லாத மூலங்களிலிருந்து திரட்டும் என்று மதிப்பிட்டுள்ளன.
  • 2025-26 ஆம் ஆண்டில், 10 மாநிலங்களில் சொந்த வரி வருவாய் ஆனது, வருவாய் வருவாய்களில் 50 சதவீதத்தினை விட அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப் பட்டு உள்ளது.
  • ஆந்திரப் பிரதேசம், குஜராத், ஹரியானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், தெலுங்கானா, தமிழ்நாடு மற்றும் டெல்லி ஆகியவை இதில் அடங்கும்.
  • மானியச் செலவினத்தில் அதிகப் பங்கைக் கொண்ட மாநிலங்களில் பஞ்சாப் மாநிலம் (வருவாய் வருவாய்களில் 21%), தமிழ்நாடு (14%), இராஜஸ்தான் (14%), கர்நாடகா (14%) மற்றும் குஜராத் (13%) ஆகியவை அடங்கும்.
  • தமிழ்நாடு அதன் மொத்த மானிய ஒதுக்கீட்டில் 60 சதவீதத்தினைப் பேருந்துப் போக்குவரத்து (12%), மானிய விலை மின்சாரக் கட்டணம் (20%) மற்றும் பொது விநியோக திட்டத்தின் கீழ் ஆதரவு (28%) ஆகியவற்றிற்கு செலவிட்டது.
  • இது PRS சட்டமன்ற ஆராய்ச்சியால் வெளியிடப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்