மாநிலங்களின் வணிகச் சீர்திருத்தங்கள் செயல்திட்டத் தரவரிசை
September 9 , 2020 1803 days 645 0
மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகமானது மாநிலங்களின் வணிகச் சீர்திருத்தங்கள் செயல்திட்டத் தரவரிசையின் 4வது பதிப்பைத் தொடங்கி வைத்துள்ளது.
தமிழ்நாடு மாநிலமானது 2019 ஆம் ஆண்டில் தொழில் தொடங்குவதற்கு உகந்த மாநிலங்களின் தரவரிசைப் பட்டியலில் 1 இடம் முன்னேறி, 14வது இடத்தைப் பிடித்துள்ளது. 2018 ஆம் ஆண்டில் தமிழ்நாடு 15வது இடத்தில் இருந்தது.
இதில் ஆந்திரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்து உத்தரப் பிரதேசம், தெலுங்கானா, மத்தியப் பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
இந்தத் திட்டமானது டிபிஐஐடி- உலக வங்கியினால் வெளியிடப்பட்டுள்ளது.