மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களுக்கான வழிவகைக்கான முன்பண வரம்பு
April 7 , 2022 1285 days 559 0
இந்திய ரிசர்வ் வங்கியானது, மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கான வழி வகைக்கான முன்பண வரம்பினை 51,560 கோடி ரூபாயிலிருந்து 47,010 கோடி ரூபாயாகக் குறைத்துள்ளது.
வழி வகைக்கான முன்பணம் என்பது, வருவாய்க்கும் செலவினங்களுக்கும் இடையே ஏற்படும் முரண்களைச் சமாளிப்பதற்கு உதவுவதற்காக வேண்டி அரசிற்கு இந்திய ரிசர்வ் வங்கி வழங்கும் ஒரு குறுகிய காலக் கடனாகும்.