TNPSC Thervupettagam

மாநிலச் சுகாதாரக் குறியீடு

May 28 , 2023 783 days 549 0
  • இது 2020-21 கோவிட் ஆண்டிற்கான நிதி ஆயோக்கின் வருடாந்திர ‘மாநிலச் சுகாதாரக் குறியீட்டின்’ 5வது பதிப்பு ஆகும்.
  • இது நிதி ஆயோக்கால் 2017 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
  • மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மற்றும் உலக வங்கியுடன் இணைந்து நிதி ஆயோக் ஆண்டுதோறும் இந்தக் குறியீட்டை வெளியிடுகிறது.
  • பெரிய மாநிலங்களில் கேரளா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் இதில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளன.
  • பெரிய மாநிலங்களில் பீகார், உத்தரப் பிரதேசம், மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இதில் கடைசி மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.
  • 2019-20 ஆம் ஆண்டு முதல் 2020-21 ஆம் ஆண்டு வரை செயல்திறன் அதிகரித்த முதல் மூன்று மாநிலங்கள்: ராஜஸ்தான், உத்தரகாண்ட் மற்றும் ஒடிசா ஆகியனவாகும்.
  • சிறிய மாநிலங்களில் திரிபுரா, சிக்கிம் மற்றும் கோவா ஆகிய மாநிலங்கள் இதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.
  • சிறிய மாநிலங்களில் அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் இதில் கடைசி மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.
  • ஒன்றியப் பிரதேசங்களில் ஒட்டு மொத்தச் செயல்திறனின் அடிப்படையில் லட்சத்தீவு முதலிடத்தைப் பெற்றுள்ள அதே நேரத்தில் டெல்லி இதில் கடைசி இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்