TNPSC Thervupettagam

மாநிலச் சுரங்கத் தயார்நிலைக் குறியீடு 2025

October 23 , 2025 15 hrs 0 min 21 0
  • இந்தியாவின் முதல் மாநிலச் சுரங்கத் தயார்நிலைக் குறியீட்டை (SMRI 2025) சுரங்க அமைச்சகம் வெளியிட்டது.
  • மாநிலச் சுரங்கத் தயார்நிலைக் குறியீடு (SMRI) ஆனது நிலக்கரி அல்லாத கனிமங்களை மையமாகக் கொண்டு சுரங்கச் சீர்திருத்தங்களில் இந்திய மாநிலங்களை தரநிலைப்படுத்தியுள்ளது.
  • இது ஏலச் செயல்திறன், ஆரம்பகால சுரங்கச் செயல்பாடு, ஆய்வு உந்துதல் மற்றும் நிலையான சுரங்க நடைமுறைகள் குறித்து மாநிலங்களை மதிப்பிடுகிறது.
  • நியாயமான ஒப்பீட்டிற்காக மாநிலங்கள் கனிம வளம், மிதமான நிதியுதவி மற்றும் குறைந்த நிதியுதவி குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
  • இந்தக் குறியீடு சுரங்கத் துறையில் வெளிப்படைத்தன்மை, செயல்திறன், நிலையான சுரங்கம் மற்றும் கூட்டுறவு கூட்டாட்சியை ஊக்குவிக்கிறது.
  • 2025 ஆம் ஆண்டில் சிறந்த மாநிலங்களில் கனிம வளம் கொண்ட பிரிவில் மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகியவை அடங்கும்.
  • கோவா, உத்தரப் பிரதேசம் மற்றும் அசாம் மிதமான வளப் பிரிவில் முன்னிலை வகிக்கின்றன அதே நேரத்தில் பஞ்சாப், உத்தரக்காண்ட் மற்றும் திரிபுரா குறைந்த நிதியுதவி குழுவில் முதலிடத்தில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்